தமிழ்நாடு

நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ள மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ.. அதிரடி ஆக்‌ஷனில் வனத்துறை !

பொட்டிபுரம் அருகே உள்ள நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ள மலைப்பகுதியில்  பற்றி எரியும் காட்டுத்தீ.. அதிரடி ஆக்‌ஷனில் வனத்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலுள்ள மேற்க்குத் தொடர்ச்சி மலை அடர்ந்த வனப்பகுதியாகவும், அரிய வகை உயிரனங்களும், அரிய வகை மரங்களும் உள்ள பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் இப்பகுதிகளில் கோடைகாலம் துவங்கினாலே காட்டுத் தீ எறிந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலை கிராமம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழைய ஏக்கர் பரப்பளவில் காட்டு தீ பற்றி எரிந்தது. இதேபோன்று இரண்டாவது நாளாக இன்று ராசிங்கபுரம் கிராமத்திலுள்ள நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை அருகே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மாலையிலிருந்து தற்போது வரை காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்து வருகிறது.

காட்டுத்தீயை சில சமூக விரோதிகள் தங்களது சுயலாபத்திற்காக அடுப்புக்கரி மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு தீயை வைத்து விட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் உள்ள அரிய வகை மரங்களும் வனவிலங்குகளும் அழிந்து வருகின்றன.

மேலும் வனப்பகுதியில் எறியும் காட்டுத்தீயை உடனடியாக அணைக்கவும், தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories