தமிழ்நாடு

கவிஞர் கபிலன் முரசொலியில் எழுதிய கவிதை படித்து மகிழ்ந்த முதல்வர்.. கடிதத்துடன் பரிசு அனுப்பி நன்றி!

உங்கள் அன்புக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என கவிஞர் கபிலனுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

கவிஞர் கபிலன் முரசொலியில் எழுதிய கவிதை படித்து மகிழ்ந்த முதல்வர்.. கடிதத்துடன் பரிசு அனுப்பி நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய தன்வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் புத்தகம் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 28ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் ‘ உங்களில் ஒருவன்’ முதல் பாகம் நூலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.

இந்த நூலில்,தி.முக. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 1953ஆம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரையிலான முதலான தனது 23 ஆண்டுகால வாழ்க்கையை பற்றி ‘உங்களில் ஒருவன்’ -1 என்ற தலைப்பில் புத்தகமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த புத்தகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறு வயது எண்ணங்கள், பள்ளிக்கால நினைவுகள், கலைஞரின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டைப் பருவத்தில் இருவண்ணக் கொடியேந்தி இயக்கத்திற்காக இயங்கத் தொடங்கிய ஏற்றமிகு பொழுதுகள் உட்பட தனது அனுபவங்கள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியானை அடுத்து பத்திரிகையாளர்கள் முதல்வர் அரசியல் தலைவர்கள் வரை பலரும் படித்து விட்டு முதலமைச்சரை பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். மேலும் இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாறு மட்டும் இடம்பெற வில்லை தி.மு.க கழகத்தின் வளர்ச்சியும் இதில் புதைந்திருக்கிறது. இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாகும் இது என பலர் கூறியுள்ளனர்.

கவிஞர் கபிலன் முரசொலியில் எழுதிய கவிதை படித்து மகிழ்ந்த முதல்வர்.. கடிதத்துடன் பரிசு அனுப்பி நன்றி!

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி முரசொலி நாளிதழில் "செயல் முதல்வர்" என்ற தலைப்பில் கவிஞர் கபிலனின் கவிதை இடம் பெற்றிருந்தது.

செயல் முதல்வர்

ஒரு துளியில் விதையெல்லாம் விருட்சமாக;

ஒரு இசையில் செவிரெண்டும் வண்ணம் சூழ;

ஒரு நதியில் பல லட்சம் மீன்கள் வாழ;

ஒரு நிழலில் தமிழ்நாடே ஓய்வு காண; திருமகனார் தலைமைக்கு வணக்கம்; எங்கள்

திசை எட்டும் உன் வழியே நடக்கும்; வாழ்வின்

வருமானம் வெகுமானம் நீரே!; நாட்டின்

வழிபாடே நீ காணும் முதல்வர் வேலை!

நெறியாளர் அய்யாவின் கருத்தைக் கொண்டு

நிகழ்கால வழிமுறையை நடத்துகின்றீர்!

மரியாதை நிமித்தத்தில் மாற்றான் தோட்ட

மலர் யாவும் உன்முகத்தை வணங்கிச் செல்லும்!

கரிகாலன் பெருநிலத்து தந்தை ஈன்ற

கறையில்லா நிறை நிலவு; ஆளும் போதே

வரலாற்றை எழுதுகின்ற முதல்வருக்கு

வானவில்லை சால்வையாய்ப் போர்த்துகின்றேன்!

கடலுக்கு நுரையீரல் அலைகள்; தென்றல்

காற்றெழுத்தை அசை பிரிக்கும் குழல்கள்; என்றும்

வடமொழிக்கு முன்னிருக்கும் குறளோன் யாப்பு;

வருங்காலம் இதைமறந்து வாழ்தல் இல்லை;

நடைமுறைக்கு ஒவ்வாத சனாதனத்தை

நசுக்குகின்ற பெருவிரல்தான் முதல்வர்!; எங்கள்

உடலுக்கும் உயிருக்கும் காப்பு: அன்னார்

உடன்பிறப்பு அனைவருமே மண்ணின் மக்கள்

சங்கத்தில் இலக்கணத்தைப் பார்த்தோம்; பாட்டு

சங்கதியில் வாய்ப்பாட்டு பார்த்தோம்; மின்னும்

தங்கத்தில் சந்தோசம் பார்த்தோம்; உம்மால்

தலைப்பிரட்டை திமிங்கலமாய்ப் பார்த்தோம்; என்றும்

எங்களுக்கு எடை மிகுந்த தலைவன்; உங்கள் -

எதுகைக்கு மோனையாய் சேர்ந்தே நிற்போம்!

பொங்கலுக்கு தமிழ்த் திருநாள் கொண்டாட்டம்போல்

பூமியெங்கும் புன்னகைக்கும் புதையல் நீங்கள்!

தடியூன்றி நடக்கின்ற பெரியார் இல்லை;

தமிழூன்றி நடக்கின்ற கலைஞர் இல்லை;

கொடியேற்றி கழகத்தை தொடங்கி வைத்த

கோமகனார் பேரறிஞர் இன்று இல்லை;

படிக்கட்டை அமைத்திட்ட தலைவர் யாரும்

பக்கத்தில் துணையாக இல்லை; மூன்று

வெடிமருந்தை மூளைக்குள் தாங்கிக் கொண்டு

வென்றெடுத்தாய் தமிழகத்தை வாழ்க நீடு!

அதைப் படித்து நெகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவிஞர் கபிலனுக்கு 'உங்களின் ஒருவன்' நூலை பரிசாக கொடுத்து நன்றியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்மீது என்றும் குன்றாத பாசத்துடன் இருக்கும் தாங்கள், என் பிறந்தநாளையொட்டி, கடந்த 1ம் தேதி வெளியான முரசொலியில் அளித்திருந்த கவிதையைப் படித்து மகிழ்ந்தேன். இந்த நன்றி கடிதத்துடன் எனது தன்வரலாற்று நூலான உங்களின் ஒருவன் (பாகம் 1) நூலையும் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். என்மீது தாங்கள் வைத்துள்ள மாறாத அன்புக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories