தமிழ்நாடு

யுவராஜுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... மற்ற குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் என்ன?

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யுவராஜூக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யுவராஜுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை... மற்ற குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர் திட்டமிட்டு கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி தீர்ப்பளித்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருமாறு:

1.யுவராஜ் ( A1)- U/s மூன்று ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை

2.அருண் (A2) மூன்று ஆயுள் சிறை

3.குமார் (A3) மூன்று ஆயுள் சிறை

4.சதீஸ்குமார் (A8) 2 ஆயுள் சிறை

5.ரகு (A9) 2 ஆயுள் சிறை

6.ரஞ்சித் (A10) 2 ஆயுள் சிறை

7.செல்வராஜ் (A11) 2 ஆயுள் சிறை

8.சந்திரசேகரன் (A12) ஆயுள் சிறை

9.பிரபு (A13) ஆயுள் சிறை +5 ஆண்டு கடுங்காவல் தண்டனை + ரூ. 5 ஆயிரம் அபராதம்

10.கிரிதர் (A14) ஆயுள் சிறை + 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை + ரூ. 5 ஆயிரம் அபராதம்

banner

Related Stories

Related Stories