தமிழ்நாடு

‘நீட்’ தேர்வால் வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள்.. அம்பலப்படுத்திய புள்ளிவிவரங்கள்!

நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

‘நீட்’ தேர்வால் வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள்.. அம்பலப்படுத்திய புள்ளிவிவரங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடந்து ஒருவாரத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய மாணவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு அதிகமாக செல்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தேர்வுகளுக்கு பிறக அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், குறைந்த செலவில் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வோர் முதலில் தேர்வு செய்யும் நாடு சீனா உள்ளது. ரஷ்யா, உக்ரைன், நேபாளம், பிலிப்பைன்ஸ், கனடா போன்ற நாடுகளுக்கும் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக அதிகம் செல்கின்றனர். இப்படி செல்பவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வுக்கு பிறகே அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால், 536 கல்லூரிகள் 83,000 மருத்துவ இடங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளன. அதாவது 100 மருத்துவ இடங்களுக்கு 1800 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. இதனால் நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் நீட் ரேங்கில் பின்னுக்கு தள்ளப்பட்டவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.

அதேபோல், தனியார் கல்லூரிகளின் அதிக கட்டணம் காரணமாக நடுத்தர மற்றும் கிராமபுற மாணவர்களால் அங்கும் சேரமுடிவதில்லை. கடைசியில் தங்களது மருத்துவக் கனவை நிறைவேற்ற அவர்கள் உக்ரைன் போன்ற வெளிநாடுகளைத்தான் நாட வேண்டியுள்ளது.

மேலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து வெற்றி பெற்றாலும் அந்த மாணவர்கள் இந்தியாவில் தங்களை மருத்துவர்களாக பதிவு செய்து சிகிர்ச்சை அளிக்க வேண்டுமானால் அவர்கள் தேசிய தேர்வாணையம் நடத்தும் FMGE என்கிற தகுதித் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும்.

‘நீட்’ தேர்வால் வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள்.. அம்பலப்படுத்திய புள்ளிவிவரங்கள்!

இதன்படிபார்த்தால், நீட் தேர்வு அறிமுகமான 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த தேர்வை எழுதுவோர் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் சராசரியாக 12 ஆயிரம் மாணவர்கள் அந்த தேர்வை எழுதியுள்ளனர். அது 2020 ஆம் ஆண்டு 36,911 ஆகவும், கடந்த ஆண்டு 41,739 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அதன்படிப் பார்த்தால் இந்தியாவில் 14 லட்சம் மருத்துவகள் இருக்க வேண்டும். ஆனால், பதிவு செய்த மருத்துவர்களின் எண்ணிக்கை 12.55 லட்சம் மட்டுமே. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மருத்துவர்களின் பற்றாக்குறை நாட்டில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவ கல்லூரிகள், மற்றும் மருத்துவ இடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories