தமிழ்நாடு

மாநகராட்சி மேயராக போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.. பட்டியல் இதோ!

தமிழ்நாடு முழுவதும் மேயர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிகள் பதவியேற்றனர்.!

மாநகராட்சி மேயராக போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.. பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக் கான மேயர், துணை மேயர்; நகராட்சித் தலைவர், துணைத் தலைவர்; பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அதன்படி இன்று நடந்த மறைமுக தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் மேயர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிகள் பதவியேற்றனர்.!

மேயர்கள் தேர்வு விவரம்!

1. சென்னை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஆர்.பிரியா போட்டியின்றி தேர்வு.

2. தாம்பரம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் வசந்தகுமாரி கமலகண்ணன் போட்டியின்றி தேர்வு!

3. திண்டுக்கல் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் இளமதி போட்டியின்றி தேர்வு!

4. திருப்பூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ந.தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு!

5. தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் என்.பி ஜெகன் போட்டியின்றி தேர்வு!

6. சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஏ.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு!

7. கரூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு!

8. வேலூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சுஜாதா அனந்தகுமார் போட்டியின்றி தேர்வு!

9. கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் அனந்தகுமார் போட்டியின்றி தேர்வு. கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயரானார் ஆட்டோ ஓட்டுநர் சரவணன்!

10. ஆவடி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஜி. உதயகுமார் போட்டியின்றி தேர்வு!

11. கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் கல்பனா போட்டியின்றி தேர்வு!

12 . திருச்சி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் மு.அன்பழகன் போட்டியின்றி தேர்வு!

13 . காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் போட்டியின்றி தேர்வு!

14. கடலூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சுந்தரி போட்டியின்றி தேர்வு!

15. தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதன் போட்டியின்றி தேர்வு!

16. ஒசூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா போட்டியின்றி தேர்வு!

17. சிவகாசி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சங்கீதா இன்பம் போட்டியின்றி தேர்வு!

18. நாகர்கோவில் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் மகேஷ் இன்பம் போட்டியின்றி தேர்வு!

19. மதுரை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் இந்திராணி போட்டியின்றி தேர்வு!

banner

Related Stories

Related Stories