தமிழ்நாடு

மக்கள் நினைத்தால் தடுக்கலாம்.. டாஸ்மாக் கடை திறப்பில் அரசு திருத்தி அமைத்த சட்டத் திருத்தம் என்ன?

டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்பதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

மக்கள் நினைத்தால் தடுக்கலாம்.. டாஸ்மாக் கடை திறப்பில் அரசு திருத்தி அமைத்த சட்டத் திருத்தம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில், குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர். மேலும் கடைகளை மூட வலியுறுத்துகிறார்கள்.

இந்நிலையில், புதிதாக திருக்கப்படும் டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்கக்கூடிய வகையில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு அரசு.

அதன்படி, இனி புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளுக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்,, டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மது விலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும் சட்டத்திருத்தம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருத்தத்தைத் தமிழக அரசு கொண்டு வந்து தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத் திருத்தத்தில் மூலம் இனி புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு மக்களின் கருத்து முக்கியமான ஒன்றியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories