தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு : வெளியானது 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை!

தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு : வெளியானது 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

10,11,12- ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30ம் தேதி வரையும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு : வெளியானது 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை!

12ம் வகுப்புக்கு ஜூன் 23ம் தேதியும், 11ம் வகுப்புக்கு ஜூலை 7ம் தேதியும், 10ம் வகுப்புக்கு ஜூன் 17ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

மேலும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10,11,12ம் வகுப்புக்கான பொதுதேர்வு அட்டவணை www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories