தமிழ்நாடு

பாஜகவின் மதவெறி அரசியலுக்கு சம்மட்டி அடி.. ‘மைக்கேல்பட்டி’ அமைந்துள்ள பேரூராட்சியில் தி.மு.க அமோக வெற்றி!

மைக்கேல்பட்டியின் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் தி.மு.க மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

பாஜகவின் மதவெறி அரசியலுக்கு சம்மட்டி அடி.. ‘மைக்கேல்பட்டி’ அமைந்துள்ள பேரூராட்சியில் தி.மு.க அமோக வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது.அதேபோல்,119 நகராட்சிகளையும், 320 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளையில் அதிமுக கூட்டணி மற்றும் தனியாக போட்டியிட்ட பா.ஜ.க படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதில், ஒருபடிமேலேச் சென்று தமிழகத்தில் மதவெறி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்கும் பா.ஜ.கவிற்கு இந்த தேர்தலின் மூலம் சம்மட்டி அடி விழுந்துள்ளது.

குறிப்பாக மதுரை மேலூரில் இஸ்லாமிய பெண்களிடம் ஹிஜாப்பைக் கழட்டக் கூறி பா.ஜ.க முகவர் ரகளையில் ஈடுபட்ட வார்டில் பா.ஜ.க வேட்பாளர் டெபாசிட்டை இழந்துள்ளார்.

அதேபோல் தமிழ்நாடில் அரியலூர் மாணவி மரணத்தை மதத்தை வைத்து அரசியல் செய்த பா.ஜ.க , மாணவியின் மரணத்திற்கு மத மாற்ற காரணம் இருப்பதாகவும் புகார் கூறியது. ஆர்.எஸ்.எஸ். மாணவ ஏ.பி.வி.பி மற்றும் பாஜக இந்த பிரச்னையை தேசிய அளவில் கொண்டு சென்ற நிலையில், இதுதொடர்பான வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை மூலம் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, மைக்கேல்பட்டியின் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பா.ஜ.க வெற்றிபெரும் என பா.ஜ.க கும்பல் கூறி வந்த நிலையில், மைக்கேல்பட்டி உள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் தி.மு.க மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 11 இடங்களில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories