தமிழ்நாடு

“கோவையில் அ.தி.மு.க மேயர் வேட்பாளர் என்று சொல்லப்பட்ட பெண் படுதோல்வி” : கோவையை கைப்பற்றும் தி.மு.க!

தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜ் 3359 வாக்குகள் பெற்று வெற்றி.

“கோவையில் அ.தி.மு.க மேயர் வேட்பாளர் என்று சொல்லப்பட்ட பெண் படுதோல்வி” : கோவையை கைப்பற்றும் தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையைன இடங்களில் வெற்றிவாகை சூடிவருகின்றனர். மாநகராட்சியில் 307 இடங்களிலும், நகராட்சியில் 1192 இடங்களிலும், பேரூராட்சியில் 2312 இடங்களிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க வேட்பாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். மேலும் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்த கோவை, சேலம் மாவட்டங்களை தி.மு.க கூட்டணி கைபற்றி வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜ் 3,359 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க மேயர் வேட்பாளராக கருதப்பட்ட கிருபாளினி படுதோல்வியடைவைத்துள்ளார். கோவை மாநகராட்சியில் இதுவரை தி.மு.க கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories