Tamilnadu

🔴 #LIVE | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - நண்பகல் 12 மணி நிலவரம் : தி.மு.க அமோக வெற்றி !

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

🔴 #LIVE | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - நண்பகல் 12 மணி நிலவரம் : தி.மு.க அமோக வெற்றி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
22 February 2022, 06:36 AM

திருநங்கை கங்கா அமோக வெற்றி!

22 February 2022, 06:35 AM

நண்பகல் 12 மணி நிலவரம்!

22 February 2022, 03:10 AM

தி.மு.க வெற்றி!

கிருஷ்ணகிரி நகராட்சி 8. வார்டுகளில் திமுக வெற்றி.

மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சி தி.மு.க 2 வார்டுகளில் வெற்றி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில், 1 வது வார்டு , 4 வது வார்டுகளில் தி.மு.க வெற்றி.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேரூராட்சியில், 5 வது வார்டு தி.மு.க செல்வி பிரதீபா வெற்றி.

திருவள்ளூர் மாவட்டம்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 1-வது வார்டு சமிமா, 2-வது வார்டு இந்துமதி, 3-வது வார்டு அப்துல் ரஷீத் ஆகிய 3 தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி.

பெரம்பலூர் - பூலாம்பாடி பேரூராட்சி 1, 2 வது வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி.

நெல்லை மாநகராட்சி : 5- வது வார்டு ஜெகநாதன் திமுக வெற்றி

திருமுருகன் பூண்டி பேரூராட்சியில்

1வது வார்டு திமுக கூட்டணிக் கட்சியான சிபிஐ வெற்றி

2வது வழியில் திமுக வெற்றி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் 1 வது வார்டு திமுக வேட்பாளர் சூரியகலா வெற்றி!

2- வது வார்டு திமுக வேட்பாளர் அனுராதா வெற்றி!

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் 1வது வார்டில் தி.மு.க வேட்பாளர் பார்வதியும் இரண்டாவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் மரியா சாந்தியும் வெற்றி.

புதுக்கோட்டை மாவட்டம் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது 2 நகராட்சிகள் 8 பேரூராட்சிகள் திமுக வேட்பாளர்கள் முன்னிலை.

22 February 2022, 03:09 AM

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

🔴 #LIVE | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 - நண்பகல் 12 மணி நிலவரம் : தி.மு.க அமோக வெற்றி !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மாநிலத்தில் மொத்தம் 268 மையங்களில் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட உள்ளன.

முன்னதாக, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 38 மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் காணொலி மூலம் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயி ரத்து 601 பதவி இடங்களுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்காக 30 ஆயிரத்து 735 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

தேர்தல் ஆணையமும், போலீசாரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்ததால் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. எனினும் சில மையங்களில் சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறின. தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு இன்றி, மந்தமாகவே இருந்தது. மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என 268 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த மையங்களில், எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் இந்த மையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories