தமிழ்நாடு

வணிகர் சங்கங்களுடன் நிதியமைச்சர் PTR ஆலோசனை: மு.க.ஸ்டாலின் அரசின் முழு பட்ஜெட் தயாரிக்கும் பணி விறுவிறு!

நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தொழிற்சாலை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனித்தனியாக ஆலோசனை

வணிகர் சங்கங்களுடன் நிதியமைச்சர் PTR ஆலோசனை: மு.க.ஸ்டாலின் அரசின் முழு பட்ஜெட் தயாரிக்கும் பணி விறுவிறு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் என்பதால் அதை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தொழிற்சாலை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் தியாகராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான புதிய அறிவிப்புகள், வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories