தமிழ்நாடு

”திமுக எப்பவும் சிங்கம் மாதிரி; சூரியன்தான் ஜெயிக்கும்” - மெய்சிலிர்க்க வைத்த மூதாட்டியின் கணீர் பேட்டி!

பழனிச்சாமிகளுக்கும் - பன்னீர்களுக்கும் இல்லாத தெளிவோடு அம்மையார் தந்துள்ள இந்தப் பேட்டி வைரலாக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.

”திமுக எப்பவும் சிங்கம் மாதிரி; சூரியன்தான் ஜெயிக்கும்” - மெய்சிலிர்க்க வைத்த மூதாட்டியின் கணீர் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'i தமிழ்' எனும் யூடியூப் சேனல், ‘VOICE OF பொது ஜனம்’ எனும் தலைப்பில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவரிடம், சேனலின் நிருபர் வினாத்தொடுக்க, அதற்கு அவர் ‘கணீர்’,‘கணீர்’ என பதில் வழங்குகிறார்.

வயது முதிர்ந்த இந்த மூதாட்டி எத்தனை தெளிவான சிந்தனையோடு பேட்டியளித்துள்ளார் என்பதைக் காணும் போது, நமது மெய்சிலிர்க்கிறது. பழனிச்சாமிகளுக்கும் - பன்னீர்களுக்கும் இல்லாத தெளிவோடு அம்மையார் தந்துள்ள இந்தப் பேட்டி வைரலாக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது.

‘i தமிழ்’ யூடியூப் சேனலின் அந்த வீடியோவில் இடம் பெற்ற உரையாடல் வருமாறு:-

நிருபர்: உள்ளாட்சித் தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள்?

மூதாட்டி: தி.மு.க.தான் வெற்றி பெறும். சூரியன்தான் வெற்றி பெறும். தளபதியின் வழிகாட்டுதல்படிதான் உள்ளாட்சி நடைபெறும். 18 வயதிலிருந்தே நான் தி.மு.க.வில் இருக்கிறேன்.

நிருபர்: தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி நடைபெறுகிறது?

மூதாட்டி: நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தெருக்களில் குப்பைகளோ, செத்தைகளோ இருக்கிறதா என்று பாருங்கள். கடந்த ஆட்சியில், போட்ட குப்பை போட்ட இடத்தில் அப்படியே கிடக்கும். இப்போது அப்படியில்லை.

நிருபர்: இந்த ஆட்சியைப் பற்றி சிலர் குறை சொல்கிறார்களே?

மூதாட்டி: அவர்கள் சும்மா சொல்லுவார்கள்; ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்புகள் கொடுத்திருக்கிறார்கள் இந்த ஆட்சியில்.

நிருபர்: மு.க.ஸ்டாலின் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று சொல்கிறார்களே?

மூதாட்டி: சொல்லிய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறார்.

நிருபர்: மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னாரே, இன்னும் தரவில்லையே?

மூதாட்டி: கஜானாவைக் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறார்களே, அவர்களிடம் கேட்கவேண்டும் இதை.

நிருபர்: இவர்தானே வாக்குறுதி அளித்தார்?

மூதாட்டி: கஜானா காலியாக இருந்தால் இவராலும் என்ன செய்ய முடியும்? இவர் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு, சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறார்.

நிருபர்: இவருடைய ஆட்சி எப்படி நடைபெறுகிறது?

மூதாட்டி: நல்லாதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க. எப்பொழுதும் சிங்கம் போன்றது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். தி.மு.கவைப் பற்றி யாரும் தரக் குறைவாகப் பேசமுடியாது. யாராவது அப்படி பேசினால், யாராக இருந்தாலும் அடிப்பேன் நான். கலைஞர் இறந்தபொழுது சென்றோம், நாங்கள் எல்லோரும் சென்றோம். என்னுடைய கால் வீங்கி இருந்தது அப்பொழுது. இந்தக் காலை வைத்துக்கொண்டு உன்னை யார் இங்கே வரச் சொன்னது என்று கேட்டாங்க.

நான் 18 வயதிலிருந்து தி.மு.க.வில் இருக்கிறேன், யாரைப் பார்த்துக் கேட்கிறாய் என்று கேட்டேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சியிலும் தி.மு.க.தான் ஆட்சியமைக்கப்போகிறது. தளபதிதான் உள்ளாட்சியில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அந்த மூதாட்டி பேட்டியளித்தார்.

நன்றி - முரசொலி நாளேடு

banner

Related Stories

Related Stories