தமிழ்நாடு

போதையில் தகராறு.. நண்பரை மது பாட்டிலால் நெஞ்சில் பலமுறை குத்தி கொலை செய்த கொடூரம் : பகீர் சம்பவம்!

புதுச்சேரி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் தகராறு.. நண்பரை மது பாட்டிலால் நெஞ்சில் பலமுறை குத்தி கொலை செய்த கொடூரம் : பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற மூர்த்தி. இவரது மனைவி ஹேமாவதி. இவர் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில், நேற்று காலை தனது நண்பருடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பத்தால் குடும்பத்தினர் பல பகுதிகளில் அவரை தேடியுள்ளனர். இதனிடையே, சீனிவாசன் சேந்தநத்தம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக வந்த தகவலை அடுத்து, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் மது பாட்டிலால் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் பல முறை குத்தி கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories