தமிழ்நாடு

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - விறுவிறுப்பாகத் தொடங்கியது வாக்குப்பதிவு” : முழு விபரம் இதோ!

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - விறுவிறுப்பாகத் தொடங்கியது வாக்குப்பதிவு” : முழு விபரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதுமுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,369, நகராட்சி வார்டுகள் 3,824 ,பேரூராட்சி வார்டுகள் 7409 என மொத்தம் 12602 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் தேர்தலில் 2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது. மேலும் 1.13 லட்சம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்பு கண்காணிக்கப்படுகிறது. அதேபோல், இணையவசதி உள்ள வாக்குச்சாவடிகளில் ஸ்டிரீமிங் எனும் கண்காணிப்பு மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்குப் பின்னர் வாக்காளர் கூட்டம் அதிகமாக இருந்தால் அனைவருக்கும் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவானது நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியதும் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை செலுத்தினார்.

banner

Related Stories

Related Stories