தமிழ்நாடு

“இதுதான் தமிழ்நாடு..” : மத மோதலுக்கு வித்திட முயன்ற பா.ஜ.க பூத் ஏஜெண்டை ஒன்றிணைந்து வெளியேற்றிய கட்சிகள்!

பா.ஜ.க முகவரை தி.மு.க, அ.தி.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் முகவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றிய சம்பவம் மதவெறி கும்பலுக்கு ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.

“இதுதான் தமிழ்நாடு..” : மத மோதலுக்கு வித்திட முயன்ற பா.ஜ.க பூத் ஏஜெண்டை ஒன்றிணைந்து வெளியேற்றிய கட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி பா.ஜ.க வாக்குச்சாவடி முகவர் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலூர் நகராட்சியில் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி இஸ்லாமிய பெண்ணிடம் பா.ஜ.க வாக்குச்சாவடி முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க வாக்குச்சாவடி முகவரின் செயலைக் கண்டித்து அவரை வெளியேற்றக் கோரி தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சிகளின் முகவர்கள் வாக்குப்பதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து, சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க வாக்குச்சாவடி முகவரை வாக்குப்பதிவு மையத்திலிருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து அப்பகுதியில் அதிகளவில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மத அடையாளங்களுடன் வாக்குப் பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மத மோதலுக்கு வித்திட முயன்ற பா.ஜ.க முகவரை தி.மு.க, அ.தி.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் முகவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றிய சம்பவம் மதவெறி கும்பலுக்கு ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories