தமிழ்நாடு

”நாங்க மக்களை சந்திச்சு ஆட்சிக்கு வந்துருக்கோம்; கூவத்தூர்ல இருந்து வரல” - EPSக்கு உதயநிதி நச் பதில்!

9 மாதகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து கழக வேட்பாளர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

”நாங்க மக்களை சந்திச்சு ஆட்சிக்கு வந்துருக்கோம்; கூவத்தூர்ல இருந்து வரல” - EPSக்கு உதயநிதி நச் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆத்தூர் நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

ஆரவாரம், எழுச்சி, அன்பு எப்போதும் இருக்கிறது. தமிழகத்தில் ஒட்டு மொத்த மக்களும் அதிகளவில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வெற்றி பெற செய்து கழக ஆட்சி அமைந்தது.

கழக ஆட்சி அமைந்து 9 மாத காலத்தில் கொரோனா இரண்டாவது பெரிய அலையின் போது மருத்துவ மனைகளில் பெட் இல்லை, ஊசி இல்லை, ஆக்ஸிஜன் இல்லை என்ற நிலையை மாற்றி விரைந்து நடவடிக்கை எடுத்தோம். கடந்த ஆட்சியில் கொரோனா விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஒரு கோடி தடுப்பூசி மட்டுமே செலுத்தினர். ஆனால் கழக ஆட்சியில் 9 மாத காலத்தில் பத்து கோடி தடுப்பூசி செலுத்தியுள்ளோம். மூன்றாவது அலையின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி மூன்றாவது கொரோனா அலையை தடுத்து இருக்கிறோம். இந்தியாவிலே கொரோனா மூன்றாவது அலையை தடுத்ததற்கு இந்தியாவின் தலை சிறந்த நெம்பர் 1 முதல்வராக கருத்துக்கணிப்பு தெரிவித்தது.

கலைஞர் சொல்வது போல சொல்வதைத் தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம். கடந்த ஆட்சியில் 5.70 லட்சம்கோடி கடன் விட்டு வைத்து சென்றுள்ளனர். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை உங்களுக்கு சிலவற்றை நினைவூட்டுகிறேன். கொரோனா நிவாரணம் இரண்டு தவணையாக 4000 ரூபாய், மகளிருக்கு இலவச பேருந்து வசதி, ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, நகைக் கடன்தள்ளுபடி, விரைவில் மகளிருக்கு 1000 மாதஉதவித் தொகை வழங்கப்படும். 9 மாதகாலத்தில் சாதனைகளை மக்களிடம்கொண்டு சேர்த்து கழக வேட்பாளர்கள்மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறசெய்ய வேண்டும். வீடு, வீடாகச் சென்று ஆட்சியின் பல சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

பழனிசாமியும் அவரது நண்பர் இளங்கோவனும் செய்த முறைகேடுகள்!

ஆத்தூர் மக்களின் கோரிக்கை பாதாள சாக்கடை திட்டம், சீரான குடிநீர், ஆத்தூர் வடக்கே பைபாஸ் சாலை விரிவுபடுத்துதல், இன்னும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அத்திட்டங்கள் தொடரும். நரசிங்கபுரம் நகராட்சியில் மக்களின் கோரிக்கைகளான பாதாளச் சாக்கடை திட்டம், தார்ச்சாலை, எம்.ஜி.ஆர். நகரில் 50 குடும்பத்திற்கு பட்டா, 3 கோடியில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளனர். அத்திட்டம் தேர்தல் முடிந்த பிறகு செயல்படும்.

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன் பட்டா இல்லாத இடத்திற்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். சாலை போடுவதாகக் கூறி பல முறைகேடுகளைச் செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எடப்பாடி பழனிசாமியும், அவருடைய கூட்டாளிகளும் விரைவில் சிறைக்குச் செல்வார்கள். எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலினைக் காணவில்லை என்று கூறி வருகிறார்.

பொய்ப் பிரச்சாரம் செய்கிறார் பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி பிரச்சாரம் மேற்கொண்டார் ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை காணவில்லை என்று கூறுகிறார். கடந்த ஒன்பதாம் தேதி நடந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அவருக்கு கண்ணுக்கு எதிரே அமர்ந்து இருக்கிறேன். அவருக்கு தெரியல எடப்பாடி பழனிசாமி அவர்களே நாற்காலிக்கு மேலே பாருங்கள். கீழே பார்த்தால் நான் தெரிய மாட்டேன். நான் உங்கள தவறா சொல்லல. நாற்காலிக்கு மேலே பார்த்தால்தான் நான் இருப்பேன்.

எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்குவேன் என்று கூறிவருகிறார். நாங்கள் மக்களைச் சந்தித்து ஆட்சி அமைத்திருக்கிறோம். உங்களைப்போல கூவத்தூரில் இருந்து ஆட்சி அமைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார் உதயநிதி ஸ்டாலினை காண வில்லை என்று ஒரு வாரமாக நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.” இவ்வாறு அவர் மக்கள் முன்னிலையில் பிரசாரத்தின் போது பேசினார்.

banner

Related Stories

Related Stories