தமிழ்நாடு

40 கஞ்சா பொட்டலத்துடன் சுற்றி வந்த நாம் தமிழர் வேட்பாளர்.. ’காப்பு’ மாட்டிய போலிஸ்!

கஞ்சா விற்பனை செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரை போலிஸார் கைது செய்தனர்.

40 கஞ்சா பொட்டலத்துடன் சுற்றி வந்த நாம் தமிழர் வேட்பாளர்.. ’காப்பு’ மாட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 13ம் தேதி இளைஞர் ஒருவர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்தபோலிஸார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், புதுக்கோட்டை நகராட்சி 23வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அப்துல் மஜீத் என்பவர்தான் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் அப்துல் மஜீத்திடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 40 கஞ்சா பொட்டலங்கள் இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதைப்பறிமுதல் செய்து கைது செய்தனர்.

மேலும் இவருடன் தொடர்பிலிருந்த ஐந்து பேரை போலிஸார் கைது செய்து அவர்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், நான்கு செல்போன்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளரே கஞ்சா விற்பனை செய்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories