இந்தியா

“ஏன்.. உங்களுக்கு மட்டும்தான் பசிக்குமா?” : கடுப்பான நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஒருவர் குளிர்பானம் அருந்தியதால் அவர் 100 குளிர்பானங்களை விநியோகிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

“ஏன்.. உங்களுக்கு மட்டும்தான் பசிக்குமா?” : கடுப்பான நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஒருவர் குளிர்பானம் அருந்தியதால் அவர் 100 குளிர்பானங்களை பார் அசோசியேஷனுக்கு விநியோகிக்க வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சாலையில் இரு பெண்களை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தாக்கியது குறித்த வழக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணையில் ஆன்லைன் மூலமாக காவல் ஆய்வாளர் ரத்தோட் ஆஜராகியிருந்தார். விசாரணையின்போது அவர் குளிர்பானம் அருந்தியதை தலைமை நீதிபதி பார்த்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் குளிர்பானம் குடித்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, “நீங்கள் சாப்பிடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எங்கள் முன்னே நீங்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மற்றவர்களும் சாப்பிட ஆசைப்படுவார்கள். அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அல்லது சாப்பிடக்கூடாது.” எனத் தெரிவித்தார்.

மேலும், 100 குளிர்பானங்களை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வழங்கவும், இல்லையெனில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் இதேபோல் ஒரு வழக்கறிஞர் விசாரணையின் போது சமோசா சாப்பிட்டதை பார்த்த நீதிபதி அனைவருக்கும் சமோசாவை பகிரும்படி கூறியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories