தமிழ்நாடு

“சிறிய ஆபரேஷனில் நலமாக்கிய அரசு மருத்துவர்கள்” : நெகிழ்ந்து பாராட்டிய திரைப்பட இயக்குநர்!

இயக்குநர் சீனு ராமசாமி, தனக்கு சிறப்பான சிகிச்சையளித்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“சிறிய ஆபரேஷனில் நலமாக்கிய அரசு மருத்துவர்கள்” : நெகிழ்ந்து பாராட்டிய திரைப்பட இயக்குநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இயக்குநர் சீனு ராமசாமி, தனக்கு ஏற்பட்ட சதைக்கட்டியை அகற்றி சிறப்பான சிகிச்சையளித்த அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரக் கட்டமைப்பில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் உயர்நவீன மருத்துவ சிகிச்சை வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

பிரபல தனியார் மருத்துவமனைகளை விடவும், அதிநவீன உபகரணங்களையும், மருத்துவ நிபுணர்களையும் கொண்டிருப்பதால் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளையே நாடி வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குநர் சீனு ராமசாமி, தனக்கு ஏற்பட்ட சதைக்கட்டியை அகற்றி சிறப்பான சிகிச்சையளித்த அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சீனு ராமசாமி, ” ‘இடிமுழக்கம்’ இரவு படப்பிடிப்பில் விஷக்கடியினால் கிருமித்தொற்று உண்டாகி வளர்சதை கட்டியொன்று வலதுகரத்தில் வளரத்தொடங்கியது.

ஒருமாத சிகிச்சைக்குப் பின் சிறிய ஆபரேஷனில் நலமாக்கிய தூய்மை நிறைந்த ஓமந்துரார் அரசு மருத்துவமனையின் அன்பான மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நன்றி. உங்கள் அர்ப்பணிப்பான சேவை மனம் வாழ்வின் மீதான நம்பிக்கையும் பிரியத்தையும் கூட்டுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories