தமிழ்நாடு

போதையில் வந்த இளைஞர்கள்; பைக் மோதி விபத்து; 11 வயது சிறுமி பலி; சென்னையில் பரிதாபம்!

சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி 11வயது சிறுமி பலி. சென்னையில் நடந்த பரிதாப நிகழ்வு.

போதையில் வந்த இளைஞர்கள்; பைக் மோதி விபத்து; 11 வயது சிறுமி பலி; சென்னையில் பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை திருவற்றியூர் குப்பத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர் தனது மகள் யுவஸ்ரீ மற்றும் மகன் ஆகாஷ் உடன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு பின்னர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, எண்ணுரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சாலையை கடக்க முயன்ற சரண்யா மற்றும் மகள் யுவஸ்ரீ, மற்றும் மகன் ஆகாஷ் மீது மோதி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அடிப்பட்டவர்களை உடனடியாக சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் சரண்யாவின் மகள் யுவஸ்ரீ (11வயது) அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த கிரித்திஷ், சத்ய குமார், சூர்யா ஆகிய மூன்று பேரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வண்ணாரபேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories