தமிழ்நாடு

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை.. அதே கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை : காரணம் என்ன?

இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை.. அதே கிணற்றில் குதித்து தாயும் தற்கொலை : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மரகதம். இந்த தம்பதிக்கு செல்வகணபதி, கோகுலகண்ணன் என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவியை திட்டிவிட்டு கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் பிரபாகரன். பிறகு கோபம் தணிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தைகள் மற்றும் மனைவி காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து மூன்று பேரையும் அக்கம், பக்கம் தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குழந்தைகள் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி மூன்று பேரின் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் குடும்ப தகராறு காரணமாகவே குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories