தமிழ்நாடு

காணாமல்போன 7 வயது சிறுமி.. 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த தமிழ்நாடு போலிஸ்: பின்னணி என்ன?

காணாமல் போன சிறுமியை விழுப்புரம் போலிஸார் 3 மணி நேரத்தில் மீட்டனர்.

காணாமல்போன 7 வயது சிறுமி.. 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த தமிழ்நாடு போலிஸ்: பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராஜேஸ்வரி, பண்ருட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.

இவரை அவரது பாட்டி பாக்கியலட்சுமி பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் பண்ருட்டி நகர பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அச்சிறுமி கெடிலம் சாலையில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. உடனே போலிஸார் அந்த சாலைவழியாக சிறுமியை தேடிச்சென்றனர்.

இதையடுத்து மணப்பாக்கம் என்ற கிராமத்திலிருந்த சிறுமி ராஜேஸ்வரியை போலிஸார் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரது பாட்டியை காவல்நிலையம் வரவழைத்து சிறுமியை அவரிடம் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோர்களின் ஞாபகம் சிறுமிக்கு வந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் சிறுமியை அவரது பெற்றோரிடம் கூட்டிச் செல்லும்படி பாட்டியிடம் போலிஸார் கூறினர். சிறுமி மாயமாகி 3 மணி நேரத்திலேயே கண்டுபிடித்த போலிஸாருக்க அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories