தமிழ்நாடு

“தவழ்ந்து சென்று முதல்வர் பதவிக்கு வந்த பழனிச்சாமிக்கு விவாதிக்க எந்த அருகதையும் இல்லை” : ஐ.லியோனி சாடல்!

மேசையின் கீழ் தவழ்ந்து காலில் விழுந்து முதல்வர் பதவியை வாங்கியவர்களுக்கு எல்லாம் எங்கள் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல மாட்டார் என ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.

“தவழ்ந்து சென்று முதல்வர் பதவிக்கு வந்த பழனிச்சாமிக்கு விவாதிக்க எந்த அருகதையும் இல்லை” : ஐ.லியோனி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆகிய நகராட்சியின் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்திற்கு தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி கலந்துக்கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இன்று எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வருக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்து இன்று முதல் அமைச்சராகி உள்ளார்.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமி மேசையின் கீழ் ஊர்ந்து சென்று சசிகலாவின் கால்களை பிடித்து முதல்வர் பதவியைப் பெற்றார். எடப்பாடி பழனிச்சாமி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினிடம் நேருக்கு நேர் மோத எந்த அருகதையும் கிடையாது. விரைவில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்த போவது தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்” என்று இக்கூட்டத்தில் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories