தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சர்ச்சை தீர்ப்பு.. பதவியை ராஜினாமா செய்தார் நீதிபதி புஷ்பா - என்ன காரணம்?

பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் வரதட்சணை வழக்குகளில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனேடிவாலா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சர்ச்சை தீர்ப்பு.. பதவியை ராஜினாமா செய்தார் நீதிபதி புஷ்பா - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் வரதட்சணை வழக்குகளில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனேடிவாலா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இருந்து நீதிமன்றங்கள் தவறுகின்றனவா என்ற அச்சம் நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கிய தீர்ப்புக்கு பிறகு மக்களிடையே எழுந்தது.

குறிப்பாக நீதிபதி புஷ்பாவின் தொடர் தீர்ப்புகள் பெண்கள் மீதான வன்முறைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில், நீதிபதியாக பணியாற்றியவர் புஷ்பா கனேடிவாலா.

இவரின் கடந்த காலத் தீர்ப்புகள் மூலம் இவர் பேசுபொருளாக மாறியுள்ளார். குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக நிற்காமல் அவர்களுக்கு எதிரான தவறான தீர்ப்பை வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் இந்த நீதிபதி.

அப்படி ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது தீர்ப்பு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் தீர்ப்பில், “பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை; விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது; ஆடையின் மேல் அத்துமீறித் தடவுவது பாலியல் வன்முறை அல்லது அத்துமீறலில் வராது” என்று தீர்ப்பளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, குழந்தைகள் வன்முறை தொடர்பான மற்றொரு வழக்கிலும் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், ஒருவர் சிறுமியின் கைகளைப் பிடிப்பதும், பேண்ட் ஜிப்பை திறப்பதும் போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் குற்றத்தில் வராது என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், போக்சோ சட்டப் பிரிவு 8 மற்றும் 10-இன் கீழ் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வேண்டியதை, நீதிபதி புஷ்பா, பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவு 12-க்கு மாற்றி, 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைக்க வழி செய்துள்ளார். இதனையடுத்து, மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என நீதிபதி புஷ்பா மற்றுமொரு சர்ச்சை தீர்ப்பை வழங்கியுள்ளார்.

நீதிபதியின் தொடர் தீர்ப்பு சர்ச்சையான நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை பரிந்துரைக்க வேண்டாம் என உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் பரிந்துரைக்க புஷ்பா கனேடிவாலா. இவரின் ராஜினாமா குறித்து சரியான விளக்கம் எதுவும் தற்போது வரை தரவில்லை. இதனால் கொலீஜியம் முடிவே நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின் ராஜினாமாவிற்கு காரணமாக இருக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories