தமிழ்நாடு

“தேர்தல் நடைபெறும் போது பிரச்சினையை தூண்டிவிட்டு மக்களை திசைதிருப்பிகிறது பா.ஜ.க” : ஈ.ஆர்.ஈஸ்வரன் சாடல்!

எப்போதெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் பிரச்சினையை தூண்டி விட்டு மக்களை திசைதிருப்பி வாக்குகளை கவர்வது பாஜகவின் வரலாறு என கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் நடைபெறும் போது பிரச்சினையை தூண்டிவிட்டு மக்களை திசைதிருப்பிகிறது பா.ஜ.க” : ஈ.ஆர்.ஈஸ்வரன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையத்தில் கட்சி பிரமுகர் இல்லத்தில் கொ.ம.தே.க பொதுச்செயலாளர் திருச்செங்கோடு தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வருகை தந்தார். அங்கு பல்லடம் நகரமன்ற உள்ளாட்சித் தேர்தலில் ஏழாவது வார்டு பகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணவேணியை அறிமுகம் செய்துவைத்து அங்கு திரண்டு இருந்த கட்சியினரிடையே உரையாற்றினார்.

முன்னதாக பல்லடம் வருகை தந்த அவரை மாவட்ட செயலாளர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பான முறையில் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஈ.ஆர்.ஈஸ்வரன் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் தமிழக முழுவதும் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தவர்களையும் மற்றும் வாக்களிக்காதவர்களையும் அரவணைத்து சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

தற்போது தற்போது கோவை திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மிக முக்கியமான பிரச்சனையான விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அமைச்சர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். எனவே உடனடியாக அமைச்சர்கள் இதில் தலையிட்டு விசைத்தறியாளர்கள் போராட்டத்திற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர்.

மேலும் கூறுகையில், பா.ஜ.க.வை பொருத்தவரையில் அதன் வரலாற்றைப் பார்த்தோமானால், எப்போதெல்லாம் தேர்தல்கள் நடைபெறும் அப்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையை தூண்டி விட்டு அதன் மூலம் வாக்காளர்களை கவர்ந்து, வாக்குகளை பெறுவதில் தீவிரமாக இருப்பார்கள். அதேபோல் தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பின்புறம் ஏதுமில்லாமல் தனிநபர் செய்த செயலை தமிழக போலிஸார் விசாரித்து வரும் நிலையில், என்.ஐ.ஏ என்கிற தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தவேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தமிழக மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல்தான் கர்நாடகா பிரச்சனையும் ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்சனையையும் பா.ஜ.க.வினர் அரங்கேற்றியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories