தமிழ்நாடு

கொரோனா தொற்றால் Tik Tok பிரபலம் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

கொரோனா தொற்று காரணமாக டிக் டாக் பிரபலம் பாஸ்கரன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் Tik Tok பிரபலம் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்று காரணமாக சினிமா நட்சத்திரங்கள் உயிரிழந்து வந்தநிலையில், பிரபல டிக் டாக் பிரபலம் பாஸ்கரன் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக் டாக் வீடியோக்கள் மூலம் பலரும் தங்களின் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி, தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இதில் சினிமா பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளிட்டு வருகின்றனர். இதன் மூலம் பலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இப்படி டிக் டாக்கிள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் தான் பாஸ்கரன். இவரின் நகைச்சுவையான டிக் டாக் வீடியோக்களைப் பார்த்து பலரும் இவரைப் பின்தொடர ஆரம்பித்துள்ளனர். மேலும் இவர் காதல் பாடல்களுக்கு அதிகமாக ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்ததால் இவரை எல்லோரும் செல்லமாக Remo பாஸ்கரன் Daddy என அழைத்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று இவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் மரணமடைந்துள்ளார். இந்த செய்திஅறிந்து பலரும் அவருக்கு இரங்கல் தெரித்து அவரது வீடியோக்களை சேர் செய்து வருகின்றனர். இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதை அடுத்து பாஸ்கர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories