இந்தியா

FB Liveல் பிரதமர் மோடி பெயரைச் சொல்லி தம்பதி தற்கொலை முயற்சி.. மனைவி பலி: உ.பியில் அதிர்ச்சிகர நிகழ்வு!

கடன் தொல்லை காரணமாக வியாபாரி ஒருவர் தனது மனைவியுடன் பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FB Liveல் பிரதமர் மோடி பெயரைச் சொல்லி தம்பதி தற்கொலை முயற்சி.. மனைவி பலி: உ.பியில் அதிர்ச்சிகர நிகழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் தோமர். வியாபாரியான இவர் தனது மனைவியுடன் சேர்ந்து பேஸ்புக் நேரலையின் போது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதை நேரலையில் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் போலிஸார் அவர்களது வீட்டிற்கு சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார். மேலும் ராஜீவ் தோமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பேஸ்புக் நேரலை, பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளதால் தற்போது உத்தர பிரதேச அரசியலில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தற்கொலை முயற்சிக்கு முன்பு ராஜீவ் தோமர், "எனக்கு பேச சுதந்திரம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

FB Liveல் பிரதமர் மோடி பெயரைச் சொல்லி தம்பதி தற்கொலை முயற்சி.. மனைவி பலி: உ.பியில் அதிர்ச்சிகர நிகழ்வு!

நான் பெற்ற கடனை அடைப்பேன். நான் இறந்தாலும் நான் செலுத்துவேன். இந்த வீடியோவை முடிந்த வரை அனைவரும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் தேசவிரோதி அல்ல. எனது நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது.

பிரதமர் மோடிக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சிறு வியாபாரிகள், விவசாயிகளின் நலன் விரும்புவர் அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள். ஜி.எஸ்.டி வரியால் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்" என கண்ணீருடன் அவர் பேசுகிறார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த வீடியோ பா.ஜ.கவிற்கு புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories