இந்தியா

"பெண்களின் உடைதான் ஆண்களை தவறு செய்ய தூண்டுகிறது": கர்நாடக பா.ஜ.க MLA பேச்சால் சர்ச்சை!

பெண்கள் அணியும் உடைதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"பெண்களின் உடைதான் ஆண்களை தவறு செய்ய தூண்டுகிறது": கர்நாடக பா.ஜ.க MLA பேச்சால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக காவித்துண்டு கும்பல் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடை அணிவது அவர்களின் தனிப்படை உரிமை என அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூட, "ஹிஜாப், ஜீன்ஸ், கூன்ஹட், பிகினி என எந்த உடையாக இருந்தாலும் அவற்றில் எதை அணிய வேண்டும் என்பது பெண்ணின் உரிமை" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெண்கள் அணியும் உடைகளால்தான் பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரேணுகாச்சார்யா, "கல்லூரியில் படிக்கும் போது பெண்கள் தங்களின் உடலை முழுவதும் மறைக்கும் படியான உடைகளைத்தான் உடுத்த வேண்டும். பெண்கள் அணியும் உடைதான் ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டி பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார். கர்நாடகா பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யாவின் இந்த பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories