தமிழ்நாடு

“என்னை பத்தி எப்படி எழுதலாம்..” : பத்திரிக்கையாளரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ !

புதுச்சேரி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் செய்தியாளர் ஒருவரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என்னை பத்தி எப்படி எழுதலாம்..” : பத்திரிக்கையாளரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க எம்.எல்.ஏ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியில் கழுகு தார்பார் என்ற வார இதழின் செய்தியாளர் சண்முகம் என்பவர், கடந்த வாரம், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தின் தொகுதியான, காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியைப்பற்றியும், தொகுதி மக்களின் கண்ணோட்டத்தை பற்றியும் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கழுகு தர்பார் வார இதழை படித்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், கழுகு தர்பார் வாரஇதழின் செய்தியாளர் சணமுகத்தின் கைப்பேசிக்கு, தனது எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு, “தன்னையும், தனது தொகுதியை பற்றியும் எப்படி எழுதலாம்” என்று ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டி, செய்தியாளர் சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், ஏற்கனவே புதுச்சேரியின் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, தன்னுடைய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதிய குற்றத்திற்காக சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கழுகு தர்பார் வார இதழ் செய்தியாளர் சண்முகத்திற்கும் அவர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்து, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு துணை ஆளுநர், முதல்வர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோருக்கு புதுச்சேரி செய்தியாளர் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories