தமிழ்நாடு

30 பாட்டில் குளுக்கோஸ்.. 2 நாள் தொடர் சிகிச்சையிலிருந்த பெண் யானை பரிதாப பலி - என்ன காரணம்?

இரண்டு நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.

30 பாட்டில் குளுக்கோஸ்.. 2 நாள் தொடர் சிகிச்சையிலிருந்த பெண் யானை பரிதாப பலி - என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்ட, அனுவாவி சுப்பிரமணியன் கோயிலுக்குச் செல்லும் வழியில் சில நாட்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று நடக்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளது. இதை அவ்வழியாகச் சென்று மக்கள் பார்த்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் உடனே அங்கு வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது உடல்நலக்குறைவால் 45 வயது உடைய பெண் யானை மயங்கி விழுந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவக் குழுவினர் அங்கு வந்து யானை விழுந்த இடத்திலேயே கூடாரம் ஒன்று அமைத்துத் தொடர் சிகிச்சை கொடுத்து வந்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக இரவு பகலாக யானைக்கு 30 குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் யானை குணமடைந்து விடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது வன ஆர்வலர்கள் மற்றும் மருத்துவக்குழு மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories