தமிழ்நாடு

750 சவரன் நகை கொள்ளைபோன விவகாரத்தில் திடீர் திருப்பம்... உறவினர்களே நகையைத் திருடி நாடகமாடியது அம்பலம்!

புதுக்கோட்டை அருகே 750 சவரன் நகை கொள்ளை போன விவகாரத்தில், உறவினர்களே நகையைத் திருடி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

750 சவரன் நகை கொள்ளைபோன விவகாரத்தில் திடீர் திருப்பம்... உறவினர்களே நகையைத் திருடி நாடகமாடியது அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலபட்டினத்தில் 750 சவரன் நகை கொள்ளை போன விவகாரத்தில், உறவினர்களே நகையைத் திருடி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோபாலபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (51). தொழில் அதிபரான இவர் புருனை நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி இவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த 750 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மீமிசல் போலிஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் போலிஸார் சோதனை செய்தனர்.

அப்போது கொள்ளையடித்தவர்கள் 559 பவுன் நகைகளை கிணற்றில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு அந்த நகைகளை போலிஸார் மீட்டனர்.

மேலும் கொள்ளை போன 191 பவுன் நகைகளை மீட்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலிஸார் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசித் தேடி வந்தனர்.

போலிஸாரின் தீவிர விசாரணையில், ஜாபர் சாதிக்கின் உறவினரான கமருஜமான் மற்றும் அசாருதீன் ஆகியோர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடர்கள் போலே உள்ளே நுழைந்து நகையை திருடியது தெரியவந்தது.

போலிஸாரிடம் கமருஜமான் அளித்த வாக்குமூலத்தில், “நானும் வெளிநாட்டில் வேலை செய்து வந்தேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஊருக்கு வந்தபோது, ஜாபர் சாதிக்கின் வீட்டில் நகைகள் இருப்பது தெரிந்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகையை திருடிச் சென்றேன்.

திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு சென்னையில் 2 நாட்கள் தங்கிவிட்டு பின்பு வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதுபோல் வந்தேன். ஆனால் போலிஸார் என்னை நெருங்குவதை உணர்ந்தால், பயத்தில் திருடிய நகையை வீட்டின் பின பக்கத்தில் உள்ள கிணற்றில் போட்டேன்” என ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து கமருஜமான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அசாருதீன் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த நகைகளை மீட்ட போலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு இருவரையும் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories