தமிழ்நாடு

மது போதையில் 6 வயது மகளிடமே பாலியல் சீண்டல்.. கொடூர தந்தை போக்சோவில் கைது!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பெற்ற மகளிடம் தந்தையே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் 6 வயது மகளிடமே பாலியல் சீண்டல்.. கொடூர தந்தை போக்சோவில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 34 வயதாகும் நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குடும்பத்தை கவனிக்காமல் விட்டதன் விளைவாக ஒரு ஆண்டுக்கு முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்த நபர், வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றியுள்ளார். இதனால் தாய்வழி தாத்தா, 6 வயது குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மகளுடன் தாத்தா வீட்டிற்குச் சென்ற அந்த நபர் மீண்டும் தொடர் குற்றச்செயலில் ஈடுபடவே, குழந்தையின் தாத்தா அவரைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவருடன் சண்டையிட்டுவிட்டு மகளை அழைத்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மகள் வீட்டில் இருக்கும்போதே பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். சில நேரங்களில் பெற்ற மகள் என்றும் பாராமல் 6 வயது குழந்தையிடமும் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது குழந்தை கூச்சலிட்டால் கடுமையாக தாக்கியுள்ளதாகவும் போலிஸார் மூலம் தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு இடையே அருகே வசிக்கும் பெண் ஒருவர் கொடுத் புகாரின் பேரில், அந்த நபரை பிடித்து விசாரித்ததில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த குழந்தையை மீட்ட போலிஸார், அவருக்கு சிகிச்சை அளித்து, அவரது தாத்தாவுடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். பெற்ற மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories