தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு.. சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு.. சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் 40 நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி இன்று தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. ஆகையால் தடுப்பு நடவடிக்கைகளை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பள்ளி, கல்லூரி பாலிடெக்னிக் வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் இடம் விட்டு போட வேண்டும்.

மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக பள்ளி நுழைவு வாயில் கிருமிநாசினி வைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு வளாகத்தின் நுழைவு வாயிலே உடல் பரிசோதனை செய்யவேண்டும்.

மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும், மாணவர்கள் மதிய வேளை உணவு அருந்தும்போது தனித்தனியே சமூக இடைவெளியுடன் உணவு உண்ண வேண்டும். அறிகுறி உள்ள மாணவர்களுக்கு உடனடியாக தொற்றுப் பரிசோதனை செய்யவேண்டும்.

நோய் கட்டுப்படுத்த பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளி பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளுக்கு வரக்கூடாது. 15 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories