தமிழ்நாடு

”செல்போனில் தொடங்கியது எங்க வந்து நிறுத்திருக்கு..” - பலே கேமரா திருடன் சிக்கியது எப்படி?

போலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 20 இடங்களில் திருடிய 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா லென்ஸ்கள் மற்றும் 6 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.

”செல்போனில் தொடங்கியது எங்க வந்து நிறுத்திருக்கு..” - பலே கேமரா திருடன் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வீடியோ போட்டோகிராபர்களை மட்டும் குறிவைத்து கடந்த ஆறு வருடங்களாக திருமண மண்டபங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த நபர் கைதாகியுள்ளர்.

சென்னை ஐ.சி.எஃப் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின். நிகழ்ச்சிகளுக்கு வீடியோ, போட்டோ கவரேஜ் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி ஐ.சி.எஃப் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது வீடியோ கவரேஜ் குழுவுடன் சென்றுள்ளார். அப்போது திருமண விழாவில் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் வேலை முடிந்தவுடன், அஸ்வினும் அவரது குழுவினரும் கேமராக்களை மண்டபத்தில் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு சாப்பிட சென்றுள்ளனர்.

திரும்பி வந்து பார்த்தபோது சுமார் 4 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ் ஒன்றை காணவில்லை. திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கேமராவை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. உடனே அஸ்வின் அவர் வைத்திருந்த சிசிடிவி பதிவையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைப்பார்த்த வீடியோகிராபி போட்டோகிராபி தொழில் செய்யும் பலர் தங்களுடைய கேமராக்கள் இதேபோல திருமண மண்டபங்களில் வேலையை முடித்துவிட்டு சாப்பிட செல்லும் நேரத்தில் திருடு போனதாக பதில் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கேமரா திருட்டு போனது தொடர்பாக அஸ்வின் ஐசிஎப் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது . இந்த நிலையில் நேற்று சென்னை வில்லிவாக்கம் காலனி பகுதியை சேர்ந்த சம்சுதீன் (51) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 15 லட்சம் மதிப்பிலான கேமராக்கள் மற்றும் லென்சுகள், 6 சவரன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தனிப்படை போலீசார் சம்சுதீனிடம் நடத்திய விசாரணையில், இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர். தொடக்ககால முதலில் சாலையோரங்களில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துள்ளார் சம்சுதீன். போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டு வந்துள்ளார் சம்சுதீன்.

”செல்போனில் தொடங்கியது எங்க வந்து நிறுத்திருக்கு..” - பலே கேமரா திருடன் சிக்கியது எப்படி?

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றுள்ளார் சம்சுதீன். அப்போது கீழே ஒரு செல்போன் கிடந்துள்ளது. அதை பர்மா பஜாரில் விற்றுக் காசாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்த ஒருவர் இதேபோல் வேறு பொருட்கள் கிடைத்தாலும் கொண்டுவா என கூறியுள்ளார். இதையடுத்து அயனாவரம் பகுதியில் நடந்த முன்பின் தெரியாத ஒரு குடும்ப திருமண விழாவில் பிரியாணி சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது வீடியோகிராஃபர்கள், கேமராக்களை மண்டபத்தில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு சாப்பிட சென்றுள்ளனர். இதைப்பார்த்த சம்சுதீன் ஒரு கேமராவையும் லென்சையும் திருடிக்கொண்டு மாயமாகிவிட்டார். பின் இதையே தொழில் ஆக்கிக்கொண்டார். முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்களுக்கு சென்று வீடியோகிராஃபர்கள் அயர்ந்த நேரத்தில் கேமராக்கள் திருடுவதை கடந்த ஆறு ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். சில நேரங்களில் மணமகன், மணமகள் அறைகளில் இருக்கும் தங்க ஆபரணங்களையும் திருடியுள்ளார்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு முறை கூட போலீஸில் சிக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories