தமிழ்நாடு

கணவனின் அசிங்கமான செயல்..போலிஸாரிடம் காட்டிக் கொடுத்த மனைவி: நடந்தது என்ன?

பெண்கள் குறிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த நபரை போலிஸார் கைது செய்தனர்.

கணவனின் அசிங்கமான செயல்..போலிஸாரிடம் காட்டிக் கொடுத்த மனைவி: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண் ஒருவரைக் காதலித்து திருணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்குப் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எதிர் வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் உடை மாற்றுவதை மறைந்திருந்து சேகர் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதனால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து அந்தப் பெண் சேகர் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கி வீடியோ நீக்க வேண்டும் என கூறினார். அப்போத வீட்டிலிருந்த அவரது மனைவி செல்போனை வாங்கி பார்த்தபோது அப்படி எதுவும் வீடியோ இல்லை.

பின்னர் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். பிறகு கணவர் நடத்தையால் சந்தேகமடைந்த மனைவி அவரது செல்போனை சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் பெண் உடைமாற்றுவது மற்றும் பெண்கள் குளிக்கும் வீடியோக்கல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories