தமிழ்நாடு

"எனக்கு பிடித்த தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்".. பத்மஸ்ரீ விருது பெறும் முத்துகண்ணம்மாள் நெகிழ்ச்சி!

சதிர் நடனக் கலைஞர் முத்து கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"எனக்கு பிடித்த தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்".. பத்மஸ்ரீ விருது பெறும் முத்துகண்ணம்மாள் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கும் பத்ம விருகளும், ஒருவருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சவுகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியம், டாக்டர் வீராசுவாமி சேஷையை, ஏ.கே.சி.நடராஜன், முத்து கண்ணம்மாள். எஸ்.பல்லே பஜந்திரி, எஸ்.தாமோதரன் ஆகிய ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், என்.சந்திரசேகரனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கப்போவது மகிழ்ச்சியாக உள்ளது என பத்மஸ்ரீ விருது பெறும் சதிராட்டக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறித்தும், நீங்கள் சந்திக்க விரும்பும் அரசியல் தலைவர் யார் என அவரிடம் கேட்டபோது, "பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. பத்மஸ்ரீ விருதைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி, பெற்றுக்கொள்ளும் போது மிகுந்த மகிழச்சியடைவேன்" என நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைய் சேர்ந்தவர் முத்துக்கண்ணம்மாள். இவர் தனது ஏழு வயதிலிருந்தே சதிர் நடனத்தை கற்றுள்ளார். இவரது குடும்பம் ஆறாவது முறையாக இந்த நடனம் கற்று வருகிறது. தற்போது இவர் சதிர் நடனக்கலையைப் பயிற்றுவித்து வருகிறார். இந்நிலையில் சதிராட்ட கலைஞரான இவருக்கு ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories