இந்தியா

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா; மகிழ்ச்சியில் மராட்டிய பட்டறை தொழிலாளி குடும்பம்!

பழைய உதிரி பாகங்களை வைத்து ஜீப் உருவாக்கிய பட்டறை தொழிலாளிக்கு மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கொடுத்த வாக்கை நிறைவேற்றியிருக்கிறார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஆனந்த் மஹிந்திரா; மகிழ்ச்சியில் மராட்டிய பட்டறை தொழிலாளி குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பழைய உதிரி பாகங்களை கொண்டு 60,000 ரூபாய் செலவில் ஜீப் ஒன்றினை உருவாக்கியிருந்தார் மராட்டியத்தைச் சேர்ந்த கொல்லை.

தேவராஷ்டிரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தத்தாத்ரய லோஹரின் இந்த கண்டுபிடிப்பால் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னவெனில், இரு சக்கர வாகனங்களில் இருப்பது போன்று கிக் ஸ்டார்ட் என்ற அம்சத்தை பொருத்தியிருப்பதுதான் லோஹர் கண்டுபிடிப்பின் அம்சமாகும். இதனை கடந்த டிசம்பர் 22 அன்று ட்விட்டரில் பகிர்ந்திருந்த ஆனந்த் மஹிந்திரா திறன் மிகுந்தவர்களின் படைப்பை பாராட்டுவதில் ஒருபோதும் தவறியதில்லை எனக் குறிப்பிட்டதோடு மற்றொரு ட்வீட்டில், லோஹர் தயாரித்துள்ள வாகனம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் சாலையில் இயக்கப்படுவதை உள்ளூர் அதிகாரிகள் நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே லோஹரின் புதுமையான கண்டுபிடிப்புக்கு வெகுமதியாக மஹிந்திரா நிறுவனத்தின் பொலேரோ காரை வழங்கி அவரது புதுமையான ஜீப்பை பெற்று அதனை மஹிந்திரா ரிசர்ச் வேலியில் வைத்து காட்சிக்கு வைக்கப்படும் எனவும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவன தயாரிப்பான பொலெரோவை பெற்றுக்கொண்டு தன்னுடைய கிக் ஸ்டார்ட் ஜீப்பை மஹிந்திரா வசம் ஒப்படைக்க லோஹர் ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நேற்று லோஹர் அவரது குடும்பத்தினரிடம் பொலெரோ கார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவருடைய அறியவகை ஜீப் தற்போது மஹிந்திரா ரிசர்ச் வேலியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது பெருமையாகவும், கூடுதலாக ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாகவும் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பதிவிட்டு பொலேரோ காரில் லோஹர் குடும்பத்தினர் செல்லும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories