தமிழ்நாடு

உயிருக்கு போராடிய குரங்கு.. 3 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள் - நடந்தது என்ன?

குரங்குக்குக் குடல் அறுவை சிகிச்சை செய்து சென்னை கால்நடை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

உயிருக்கு போராடிய குரங்கு.. 3 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஐ.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் ஆறு வயது குரங்கு ஒன்று வயிற்றில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளது. இதைப்பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் உடனே வனவிலங்கு காப்பாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த வனவிலங்கு காப்பாளர்கள் குரங்கை மீட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள பென்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் குரங்கைப் பரிசோதனை செய்தனர்.

இதில், குரங்கின் குடலின் ஒரு பகுதி சேதடைந்ததால் ரத்தம் வந்துகொண்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து குரங்கிற்குக் குடல் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

பின்னர் குரங்கிற்கு மூன்று மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து குரங்கின் வயிற்றிலிருந்து ரத்தம் வெளியேறுவது நின்றது. பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பை அடுத்து கிண்டி தேசிய பூங்காவில் குரங்கு பத்திரமாக விடப்பட்டுள்ளது.

இதையடுத்து சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, குரங்கை காப்பாற்றிய மருத்துவர்கள் குழுவிற்குப் பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் சிகிச்சைக்கு பிறகு கிண்டி தேசிய பூங்காவில் குரங்கு விடப்படும் வீடியோவையும் இணைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ஆறு வயது குரங்கிற்குக் குடல் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்த மருத்துவர்களின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories