தமிழ்நாடு

“வீட்டின் பூட்டை உடைச்சா தான...” - நூதனமாக கொள்ளையில் ஈடுபட்ட திருடன்; வலைவீசும் குரோம்பேட்டை போலிஸ்!

வழக்கமாக வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெறும் நிலையில் குரோம்பேட்டையில் 7 சவரன் நகைகள் களவுபோனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வீட்டின் பூட்டை உடைச்சா தான...” - நூதனமாக கொள்ளையில் ஈடுபட்ட திருடன்; வலைவீசும் குரோம்பேட்டை போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் மனைவி பரமேஸ்வரி மற்றும் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு பொங்கல் விடுமுறைக்காக சென்றிருந்திருக்கிறார்.

பண்டிகை முடிந்து சாஸ்திரி காலணி 2வது தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைக்காமல் பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து பெருமாள் புகார் தெரிவித்திருக்கிறார். வழக்குப்பதிந்த போலிஸார் கொள்ளையனை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

முன்னதாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவும் வேலை செய்யாமல் இருந்ததால் வீட்டின் பூட்டை உடைக்காமல் கொள்ளையன் வீட்டினுள் எப்படி நுழைந்திருப்பான் என்ற கேள்வி போலிஸாரை சவாலில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் களவாணிக்கு தீவிரமாக வலை வீசியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories