தமிழ்நாடு

கணவருடன் சண்டை.. 100 அடி கிணற்றில் குதித்த மனைவி : நடந்தது என்ன?

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் சண்டை.. 100 அடி கிணற்றில் குதித்த மனைவி : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி மாவட்டம், சிலமலை கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டு ராஜா. இவரது மனைவி மலர்க்கொடி. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் வீட்டில் தூங்கியுள்ளனர். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி மலர்க்கொடியைக் காணவில்லை. இதனால், காட்டு ராஜா அக்கம் பக்கத்தினரிடம் மனைவி குறித்து விசாரித்துள்ளார். இதையடுத்து 100 அடி ஆழ கிணற்றில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாகக் காட்டு ராஜாவுக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு சென்று பார்த்தபோது அது தனது மனைவி மலர்க்கொடிதான் என்பதை அறிந்து கதறியழுதார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலிஸாரும், தீயணைப்புத்துறையினரும் கிணற்றிலிருந்த மலர்க்கொடியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து கணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பச் சண்டையில் கிணற்றில் விழுந்து மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories