தமிழ்நாடு

ஜன.,19ல் நடக்கவிருந்த 10,12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவலை அடுத்து ஜனவரி 31ம் தேதி வரை அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை.

ஜன.,19ல் நடக்கவிருந்த 10,12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அண்மை நாட்களாக கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories