தமிழ்நாடு

“மேகக் கூட்டங்களுக்கு ஹெலிகாப்டர் நுழைந்தே விபத்துக்கு காரணம்?” : இந்திய விமானப்படை FIR-ல் சொல்வது என்ன?

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது, மேகக் கூட்டங்களுக்கு ஹெலிகாப்டர் நுழைந்தே விபத்துக்கு காரணம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

“மேகக் கூட்டங்களுக்கு ஹெலிகாப்டர் நுழைந்தே விபத்துக்கு காரணம்?” : இந்திய விமானப்படை FIR-ல் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் கடந்த 8ஆம் தேதி காலை 12 மணியளவில் கடுமையான மேகமூட்டம் காரணமாக நாட்டின் முப்படை தளபதி பிபின் ராவுத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்து குறித்து விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் மான் வேந்தர் சிங் தலைமையில் விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முதற்கட்ட விசாரணை அறிக்கை விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், எதிர்பாராத விமாக ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக மேகக் கூட்டங்களுக்கு ஹெலிகாப்டர் நுழைந்தே விபத்துக்கு காரணம் எனக் குறிப்பிடுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கிடம் தாக்கல் செய்யப்பட்டது.

banner

Related Stories

Related Stories