தமிழ்நாடு

"தி.மு.க இந்து விரோத கட்சி என்ற அவதூறை அடித்து நொறுக்கிவிட்டார் சேகர்பாபு” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க இந்து விரோத கட்சி என்ற பொய் பிரச்சாரத்தை அமைச்சர் சேகர்பாபு அடித்து உடைத்துள்ளார் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பேசியுள்ளார்.

"தி.மு.க இந்து விரோத கட்சி என்ற அவதூறை அடித்து நொறுக்கிவிட்டார் சேகர்பாபு” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க ஆட்சி அமைக்கும் முன் இந்து விரோத கட்சி என்ற தவறான கருத்தினை பரப்பினார்கள் என்றும் அதிரடியாக செயல்பட்ட அமைச்சர் சேகர்பாபு அதனை மாற்றி உள்ளார் என்றும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ புகழாரம் சூட்டியுள்ளார்.

பொங்கல் திருநாளையொட்டி துறைமுகம் சட்டசபை தொகுதியில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு புத்தாடைகள், பொங்கல் பரிசுத்தொகுப்பு, நிதியுதவி மற்றும் 2022-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சியை முதற்கட்டமாக தொடங்கி வைக்கும் விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் தி.மு.க நிர்வாகிகளுக்கு பரிசுத் தொகுப்புகளை வழங்கி தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசுகையில், “கொரோனா இரண்டாம் அலை வந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்தது.

"தி.மு.க இந்து விரோத கட்சி என்ற அவதூறை அடித்து நொறுக்கிவிட்டார் சேகர்பாபு” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

நாம் அனைவரும் தீவிரமாகச் செயல்பட்டு கொரோனா தொற்றை ஒழித்தோம். தற்போது மூன்றாவது அலை மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த மூன்றாவது அலையையும் சிறப்பாக கையாண்டு தமிழக அரசு மக்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தி.மு.க ஆட்சி அமைப்பதற்கு முன்னர் நம் கட்சி மீது தவறான தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். தி.மு.க இந்து விரோத கட்சி எனப் பொய் பிரச்சாரம் செய்து வந்தனர். அதை அடித்து உடைத்து சிறப்பான வகையில் சேகர்பாபு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories