தமிழ்நாடு

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் கைவரிசை.. 11 செல்போன்களை திருடிய டெலிவரி பாய் கைது : சிக்கியது எப்படி?

ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்த 11 செல்போன்களை திருடிய டெலிவரி பாயை போலிஸார் கைது செய்தனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களிடம் கைவரிசை.. 11 செல்போன்களை திருடிய டெலிவரி பாய் கைது : சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கொடுங்கையூர் பகுதியில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை மேலாளராக ஞானசேகர் என்பவர் உள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள் ஆர்டர் செய்திருந்த செல்போன்கள் இன்னும் வரவில்லை என புகார் வந்துள்ளது. இதையடுத்து ஞானசேகர் இது குறித்து விசாரணை செய்தபோது ஆர்டர் செய்திருந்த 11 செல்போன்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த திமேஷ் என்ற வாலிபர்தான் செல்போன்கள் திருடியதை போலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து போலிஸார் விசாரணை நடத்திய போது, செல்போன்களை திருடியதை ஒத்துக் கொண்டதை அடுத்து அவரை போலிஸார் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories