தமிழ்நாடு

நடுவீதியில் சீருடையை கழட்டிவிட்டு மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. புதுச்சேரியில் அவலம் - பின்னணி என்ன?

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடுவீதியில் சீருடையை கழட்டிவிட்டு மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. புதுச்சேரியில்  அவலம் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளி மாணவர்கள், பத்துக்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியில் ஒருவருக்கு ஒருவரை தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பள்ளி சீருடையுடன் மாணவர்கள் இரு மாணவரை மாறி மாறி தாக்குவதும், அதனை அங்கிருந்தவர்கள் ஏன் தாக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்புவதும், இதில் பதிவாகி உள்ளது. பள்ளி சீருடையுடன் சிறிது நேரம், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் மாணவர்கள், உடனடியாக அங்கிருந்து கிளம்புங்கள் என்று ஒரு மாணவன் கூறுவதும், வீடியோ எடுப்பவர் எதுக்கு அண்ணா வீடியோ எடுக்கிறர்கள் என்று கேள்வி கேட்பதும் இதில் பதிவாகி உள்ளது.

காவல்துறைக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் , அவ்வாறு புகார் வந்தால் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை மாநகர முத்தியால்பேட்டை போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories