தமிழ்நாடு

5 வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. 4 பேர் கைது: போலிஸுக்கு கிடைத்த ரகசிய தகவல் -சிக்கியது எப்படி?

திருவள்ளூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேரை போலிஸார் கைது செய்தனர்.

5 வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. 4 பேர் கைது: போலிஸுக்கு கிடைத்த ரகசிய தகவல் -சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா, இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சலூன் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகத் திருவள்ளூர் தாலுகா போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அதிரடியாகச் சோதனை செய்தனர்.

அப்போது, இந்த மசாஜ் சென்டரில் போலிஸ் தொழில் நடந்து வருவதை போலிஸார் உறுதி செய்தனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் சரண்யா, அபிராமி (33), ரபிக் (25) இஸ்ரா அலி (21) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.

கடந்த ஐந்து வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories