தமிழ்நாடு

இரட்டை படுகொலை வழக்கு.. போலிஸ் மீது குண்டு வீசிய 2 ரவுடிகள் என்கவுன்டர் : பின்னணி என்ன?

செங்கல்பட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகளை போலிஸார் என்கவுன்டர் செய்தனர்.

இரட்டை படுகொலை வழக்கு.. போலிஸ் மீது குண்டு வீசிய 2 ரவுடிகள் என்கவுன்டர் : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையில் அப்பு கார்த்திக் என்பவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்றுபேர் கொண்ட கும்பல் நாட்டு வெடி வீசி, அப்பு கார்த்திக்கை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்

பின்னர் அந்த கும்பல் மகேஷ்குமார் என்பவர் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அடுத்தடுத்து இரட்டை கொலை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர். பின்னர் இரட்டை கொலையில் தொடர்புடைய மாதவன், ஜெசிகா ஆகிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்தனர்.

மேலும் தீனா, மொய்தீன் ஆகிய இரண்டு பேர் காட்டுப்பகுதியில் பதுங்கிருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்குச் சென்றபோது போலிஸார் மீது இந்த கும்பல் வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்றது. இதனால் போலிஸார் அவர்கள் மீது என்கவுன்டர் செய்தனர். இதில் ரவுடி தீனா, மொய்தீன் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

banner

Related Stories

Related Stories