தமிழ்நாடு

சிறுமியைக் கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்.. உரிமையாளரை எச்சரித்த போலிஸ் : நடந்தது என்ன?

சாலையில் நடந்து சென்ற சிறுமியை நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியைக் கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்.. உரிமையாளரை எச்சரித்த போலிஸ் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை நொயம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவன். இவரது மகள் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமி தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியே வந்த வளர்ப்பு நாய் ஒன்று திடீரென சிறுமியைக் கடித்து இழுத்துச் சென்றது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாயிடம் இருந்து சிறுமியை மீட்டு முயற்சி செய்தனர். இதற்குள் சிறுமியின் கை, கால், முதுகு ஆகிய 16 இடத்தில் கடித்து குதறியது. பின்னர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் சேர்த்தனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது புகார் அளித்தனர். பின்னர் நாயின் உரிமையாளர் விஜயலட்சுமியைக் காவல்நிலையம் அழைத்து போலிஸார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories