தமிழ்நாடு

தெருநாய் கடித்து குதறிய குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சர்.. பெற்றோர் நன்றி!

தெருநாய் கடித்துக் குதறிய குழந்தையின் சிகிச்சைக்கு அமைச்சர் கணேசன் நிவாரண உதவி வழங்கினார்.

தெருநாய் கடித்து  குதறிய குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய முதலமைச்சர்.. பெற்றோர் நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குழந்தை தனது தாத்தாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கோல்டன் பீச் பூங்காவிற்குச் சென்றுள்ளது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சூழ்ந்து கொண்ட தெருநாய்கள், குழந்தையைக் கடித்துக் குதறியுள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காகப் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு குழந்தைக்கு 60 தையல் போடப்பட்டது. இது குறித்து குழந்தையின் தாய் சமூக வலைதளத்தில் வெளியிட்ட உருக்கமாக வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த சம்பம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடடினயாக குழந்தையின் சிகிச்சைக்கான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் குழந்தையின் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையைப் பெற்றோரிடம் வழங்கினார்.

பின்னர் குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய முதல்வருக்கும், அமைச்சருக்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories