தமிழ்நாடு

பணம் வராததால் ஆத்திரம் .. ATM எந்திரத்தை உடைத்த இளைஞர்கள்... சுற்றி வளைத்த போலிஸ் - நடந்தது என்ன?

ATM எந்திரத்தை உடைத்த வட மாநில இளைஞர்களை போலிஸார் கைது செய்தனர்.

பணம் வராததால் ஆத்திரம் .. ATM எந்திரத்தை உடைத்த இளைஞர்கள்... சுற்றி வளைத்த போலிஸ் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்திர சேகர் பூவே, பிருந்தாவன் பகார்த்தி. இவர்கள் இருவரும் கோவை ராக்கிபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் ராக்கிபாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றனர். அப்போது பணம் வராததால் ஆத்திரமடைந்த இருவரும் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளனர்.

இதையடுத்து, ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டதால் மும்பையில் உள்ள வங்கிக்கு எச்சரிக்கை சென்றது. உடனே போலிஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலிஸார் அங்கு வந்து பார்த்தபோது ஏ.டி.எம் மையத்தில் யாரும் இல்லை.

பின்னர், சற்று தள்ளி நின்றிருந்த இவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது பணம் வராததால் எந்திரத்தை உடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories